|
உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும்
இருப்பது ஏன்?
- சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள்? ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது?
- அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு
மூளைதானே ?
- ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதும் அனைவருக்கும் பொதுவானதுதானே?
அப்புறம் எப்படி ஒரு சிலரால் மட்டும் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்க முடிகிறது? பெரும்பாலானவர்களால்
முடிவதில்லை ?
காரணம் இதுதான்.
சாதனையாளர்கள் சரியாக முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தப் பிரச்னைக்கு, எப்போது,
என்னமாதிரியான தீர்வுகள் சரி என்று துல்லியமாகக் கணிக்கிறார்கள்.
சிறப்பான முடிவெடுக்கும் திறன் என்பது யாரோ தேவதை வந்து கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வதால்
வருவதல்ல . மிக எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும்
திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருங்கள்! உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும்
நீங்கள் , நீங்கள் மட்டுமே காரணமாக இருக்கிறீர்கள். ஆகவே, உங்களின் சிறப
|