ராஜாஜி என்றும், சி.ஆர். என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட ராஜாஜியை நமது காலத்தில் வாழ்ந்த ‘சாணக்கியர்’ என்று சொல்லுகின்றவர்களும் இருக்கிறார்கள். ராஜாஜி மிகச் சிறந்த அரசியல் மேதை என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. ஆனால் அரசியல் தலைவர்களில் சற்று வித்தியாசமான தலைவராகவே அவர் வாழ்ந்தார். ராஜாஜியை காந்திஜி தன்னுடைய மனசாட்சியின் காவலர் என்று ஏற்றுக் கொண்டார். இராஜாஜியின் திறமையிலோ, ஒழுக்கத்திலோ நேர்மையிலோ அல்லது ராஜதந்திர விவேகத்திலோ காந்திஜிக்கு எந்த விதமான சந்தேகமும் இருந்திருக்க வழியில்லை. ஆனால் ராஜாஜி எப்போதுமே பிரச்சினைக்குரிய மனிதராகவே இருந்தார். தனக்கு சரி என்று பட்டதை சாதிக்க முயல்வாரே தவிர, விட்டுக் கொடுத்து போகமாட்டார். இந்தி மொழி ஆதிக்கம், இந்தி மொழி பேசாத மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்கிற நிலைமை தோன்றியபோது, அவரே இந்தியை எதிர்க்கவும் தயங்கவில்லை. ஜாதி பேதமற்ற ஒரு இந்தியச் சமுதாயத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றியபணி எந்த இந்தியத் தலைவரின் பணிக்கும் சற்றும் குறைந்ததல்ல. காங்கிரசுக்குள்ளேயே அவர் ஒரு தனி ஸ்தாபனமாக வாழ்ந்தார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புராஜாஜி
எழுத்தாளர்கெளசிகன்
பதிப்பாளர்கங்கை புத்தக நிலையம்
பக்கங்கள்296
முதல் பதிப்பு1968
தற்போதைய பதிப்பு2009
பதிப்பு4
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
ராஜாஜி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
கெளசிகன் எழுதிய நூல்கள்









