சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கிய, உயர்த்திய, பாதித்த, பரவசப்படுத்திய மனிதர்களை, ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து. கலைஞரும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கண்ணதாசனும், பாரதிராஜாவும் இளையராஜாவும், ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது, நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது. வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது, ஆழமானது, உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
எழுத்தாளர்வைரமுத்து
பதிப்பாளர்திருமகள் நிலையம்
பக்கங்கள்248
முதல் பதிப்பு1991
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு12
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
வைரமுத்து எழுதிய நூல்கள்











