"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன. கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பால்" இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிரு.வி.க.திருக்குறள் விரிவுரை பாயிரம் II
எழுத்தாளர்தமிழ்த்தெண்றல் திரு.வி.க.
கட்டுHard binding
முதல் பதிப்புMar, 1997
பக்கங்கள்799
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திரு.வி.க.திருக்குறள் விரிவுரை பாயிரம் II
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
தமிழ்த்தெண்றல் திரு.வி.க. எழுதிய நூல்கள்







