சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூலில் மலையைப் பற்றி அடிகள் எழுதும் பொழுது மலையைக் குறிக்கும் பல்வேறு சொற்களை இளஞ்சிறார்க்கு அறிமுகப்படுத்துகின்றார். “மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினையுடையது. மல் என்றால் வலிமை. மலைகளெல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு என்றும், ஓரிடத்திற் குறுக்கே நீண்டு கிடக்கும் மலையை ‘விலங்கல்’ என்றும் ; ஒன்றன் மேலொன்று அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை ‘அடுக்கல்’ என்றும் ; எதிரொலி செய்யும் மலையைச் ‘சிலம்பு’ என்றும் ; மூங்கிற்காடுகள் உள்ள மலையை ‘வரை’ என்றும் ; காடுகள் அடர்ந்த மலையை ‘இறும்பு’ என்றும் ; சிறிய மலையைக் ‘குன்று, குவடு, குறும்பொறை’ என்றும் ; மண் மிகுந்த மலையைப் ‘பொற்றை, பொச்சை’ என்றும் ; மலைப்பக்கத்தைச் ‘சாரல்’ என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும்.” இவ்வாறு மலை என்ற சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு சொற்களை இளஞ்சிறார்க்கு அறிமுகப்படுத்துகின்றார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசிறுவர்க்கான செந்தமிழ்
எழுத்தாளர்மறைமலையடிகள்
கட்டுPaper Back
முதல் பதிப்புAug, 2004
பக்கங்கள்160
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சிறுவர்க்கான செந்தமிழ்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
மறைமலையடிகள் எழுதிய நூல்கள்










