Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > மணிமகுடம்
 மணிமகுடம்

மணிமகுடம்

எல்.கைலாசம் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:350

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
திருமாலின் குணத்தையும், அழகையும் நெஞ்சுருகப் பாடிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் குலசேகர ஆழ்வார்.

சேர மாமன்னர் திடவிரதரின் செல்வமகனாக இந்தப் பூவுலகில் அவதரித்து, அரண்மனையில் சிறப்புடன் வளர்ந்து, எதிரிகளையும் அன்பினால் மாற்றி, உலகமே போற்றும் மாபெரும் மன்னராகப் புகழ் பெற்று வாழ்ந்து வந்த குலசேகர ஆழ்வார் திடீரென்று ஒருநாள், அரசையும் குடும்பத்தையும் துறந்து திருமாலின் பக்தராகி அடியவர்களுக்கு அடியவரானார். ஏன் இந்த மனமாற்றம் ஏற்பட்டது?

ஆனாது செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும், மண்ணரசும் யான் வேண்டேன் என்று புகழ் பெற்ற சேர அரசை ஏன் துறந்தார்?

பெரும் புகழுடன் வாழ்ந்த மாபெரும் மன்னரைத் திருமாலின் தேனார்ப் பூஞ்சோலை திருவேங்கட சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதி உடையோன் ஆக மாட்டேனா என்று ஏங்க வைத்தற்குக் காரணம்தான் என்ன?

மணிமகுடத்தைத் துறந்து அடியவருக்கு அடியாராய் வாழ்ந்த குலசேகர ஆழ்வாரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் இந்தச் சரித்திரகதை மிகவும் எளிதான நடையில் படிப்பவர்களின் மனதைக் கவரும் வண்ணம் எழுதப் பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் இருப்பவர்களின் அகத்தில், நல்லவை பலவும் நடக்கும். தீமைகள் மறைந்து நன்மைகள் பெருகும்.

வல்வினைகள் தீர்க்கும் திருமாலின் புகழ்பாடும் இந்தப் புத்தகம், அகத்தில் இருந்தால் குலசேகர ஆழ்வாரே வீட்டில் இருந்து நம்மை வழி நடத்துவது போலாகும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புமணிமகுடம்

எழுத்தாளர்டாக்டர்.எல்.கைலாசம்

பக்கங்கள்728

தற்போதைய பதிப்பு2011

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    மணிமகுடம்

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
எல்.கைலாசம் எழுதிய நூல்கள்