திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிரூட்டினார். ஜெயலலிதா, வைகோ என்று புதிய தலைவர்கள் அறிமுகமான-போது, திராவிட இயக்கம் விரிந்தும், பிரிந்தும் வளர ஆரம்பித்தது. என்றாலும், திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது. அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக திமுகவை அண்ணா வளர்த்தெடுத்ததன் பின்னணியில்தான் எத்தனைப் போராட்டங்கள். தியாகங்கள்! திராவிட இயக்கத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவான 1909 தொடங்கி அண்ணா மறைந்த 1969 வரையிலான அரசியலும் சரித்திரமும் புத்தகத்தின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிராவிட இயக்க வரலாறு (Part 1 & 2)
எழுத்தாளர்ரா.முத்துக்குமார்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
தற்போதைய பதிப்பு2010
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திராவிட இயக்க வரலாறு (Part 1 & 2)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ரா.முத்துக்குமார் எழுதிய நூல்கள்







