Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > சோம.வள்ளியப்பனின் சுய முன்னேற்ற நூல்கள்
 சோம.வள்ளியப்பனின் சுய முன்னேற்ற நூல்கள்

சோம.வள்ளியப்பனின் சுய முன்னேற்ற நூல்கள்

விலை:535
எங்களது விலை:490

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்கள்
உஷார் உள்ளே பார், இட்லியாக இருங்கள், காலம் உங்கள் காலடியில், ஆளப்பிறந்தவர் நீங்கள், தள்ளு, உறுதி மட்டுமே வேண்டும்.

தள்ளு:
உங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.

உஷார் உள்ளே பார்:
தேசத்தை ஆள விரும்புகிறீர்களா? ஆளலாம். கோடி கோடியாகச் சம்பாதித்துக் குவிக்க விரும்புகிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது! அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

காலம் உங்கள் காலடியில்:
நேர நிர்வாகத்தை எளிய தமிழில் சொல்லித் தருகிற இந்நூல், தமிழில் ஒரு புதுவிதமான எழுத்துமுறையை அறிமுகப்படுத்துகிறது. சுயமுன்னேற்றக் கட்டுரைகள் அடங்கியது என்றாலும் ஒரு புனைகதை நூலுக்குரிய விறுவிறுப்பும் வேகமும் கொண்ட மொழியில் எழுதப்பட்டது.

இட்லியாக இருங்கள்:
இந்த புத்தகம் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.

உறுதி மட்டுமே வேண்டும்:இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசோம.வள்ளியப்பனின் சுய முன்னேற்ற நூல்கள்

எழுத்தாளர்சோம.வள்ளியப்பன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

சோம.வள்ளியப்பன் எழுதிய நூல்கள்