கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் குறிப்பிலிருந்து நெய்தற் பகுதியைச் செய்த நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி, இத் தொகையைத் தொகுத்தார் என்று கொள்ளலாம்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகலித்தொகை (உரையுடன்)
எழுத்தாளர்சி.வை.தாமோதரம்பிள்ளை
கட்டுPaper Back
முதல் பதிப்பு2006
தற்போதைய பதிப்பு2008
பக்கங்கள்528
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
கலித்தொகை (உரையுடன்)
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased






